நவம்பர் 07, 2009

தேடலைச்சுவாசி

தேடல்
உன்
முகாரிக்கு முடிவுரையும்
பூபாளத்திற்கு வாழ்த்துரையும்
எழுதுமோர் ...
சிறகுச் சித்தாந்தம் .

இது
சுயமேம்பாட்டின்
சுருக்கெழுத்து .
வானத்தையே விலைபேசும்
வசீகர மந்திரம் .

தேடலே ...
நித்தம் உன்னை
புதிதாய்ச் செதுக்கும்
வைர உளி .
இருட்டிலும் உன்னை
ஒளிரச் செய்யும்
சூரிய வெளிச்சம் .

தேடல்
உன்
முன்னேற்றத்தை
முகவரியாய் எழுதும்.
முகத்தைப்
பொன்னேட்டில் வரையும் .

தேடல்
விடியலைக் கற்பிக்கும்
வியர்வைப் பாடம் .
வெற்றிக் கனி பறிக்க
வித்திடும் ஏணி .

தேடலினால்
சிகரங்கள்
உன்னிடம்
கைகுலுக்கும் .
தேசங்கள்
உன்னை மொழிபெயர்க்கும் .

தேடல்
வாழ்வின் பிடிப்பு
வசந்தத்தின் அழைப்பு
இது ,
என்றும் உன்னை
இளமையாய் வைத்திருக்கும்
சுவை மருந்து - இதை
தினம் அருந்து.

தேடலை என்றும் சுவாசி !
தேசத்தில் நீதான் சுகவாசி !!

(இது எனது முதல் இலட்சிய படைப்பான "தேடலைச்சுவாசி" நூலிலிருந்து.... )
( வெளியிட்ட‌ ஆண்டு.2004 சூலை )

54 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

//தேடல்
உன்
முன்னேற்றத்தை
முகவரியாய் எழுதும்.
முகத்தைப்
பொன்னேட்டில் வரையும் .//

உண்மைதான். தேடலின் கிடைக்கும் இனிமைக்கு அளவில்லை. உங்களின் கவிதைபோல...

//(இது எனது முதல் இலச்சிய படைப்பான "தேடலைச்சுவாசி" நூலிலிருந்து.... )//

லட்சியங்கள் தொடரட்டும்...

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது... ....................................
லட்சியங்கள் தொடரட்டும்...//

வ‌ருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க‌ ந‌ன்றி பாலாசி.

VN.Thangamani சொன்னது…

தேடல்தான் எல்லாவலர்சிக்கும் விதையும் வித்தும் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். பதிவுக்கு நன்றி. சி.கருணாகரசு அவர்களே.

வேல் கண்ணன் சொன்னது…

நல்லது. இனி உங்களின் வெற்றி பயணத்தில் நாங்களும் உடன் சேருவோம்.

ஈரோடு கதிர் சொன்னது…

தேடல்தான் தான் வாழ்க்கை...

கவிதை அருமை

தமிழ் சொன்னது…

அருமையான கவிதை

இந்தப் பொத்தகத்தைப் படித்தவன் என்னும் முறையிலும்,
உங்களின் கவிதை வரிகளை நேசிக்கும் வாசகன் என்னும் முறையிலும் ,தங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்னும் பல படைப்புகளை எதிர்நோக்கி

அன்புடன்
திகழ்

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

சுய முன்னேற்றத்தின் முதல் படி தேடல்............

பிறந்தவுடன் தொடங்கும் தேடல் ஏனோ பாதியில் நின்றுவிடுகிறது பலருக்கு....

வரிகள் வசீகரம்

அன்புடன்
ஆரூரன்

ஹேமா சொன்னது…

தேடல் இல்லையென்றால் வாழ்வு மந்தமாய்.வாழ்வின் சுவாரஸ்யமே தேடல்தான்.

rathinapugazhendi சொன்னது…

தேடல் அதுதானே நம்மையெல்லாம் இயக்கிக்கொண்டிருக்கிறது நண்பரே. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் சொன்னது…

சுவாசம் எப்படி தேவையோ அது போன்றே தேடலும் ...

-----------------

தேடலினால்
சிகரங்கள்
உன்னிடம்
கைகுலுக்கும் .
தேசங்கள்
உன்னை மொழிபெயர்க்கும்

------------------

அருமை நண்பரே!

இன்றைய கவிதை சொன்னது…

//தேடல்
வாழ்வின் பிடிப்பு
வசந்தத்தின் அழைப்பு
இது ,
என்றும் உன்னை
இளமையாய் வைத்திருக்கும்
சுவை மருந்து - இதை
தினம் அருந்து.//

அருமையான பதிவு.

தேடல் பற்றி இத்துணை தெளிவாய்
இதுவரை நான் படித்ததில்லை!

-கேயார்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//தேடல்
விடியலைக் கற்பிக்கும்
வியர்வைப் பாடம் .
வெற்றிக் கனி பறிக்க
வித்திடும் ஏணி .//

விளக்கமும் தேடல் குறித்தான மற்ற சிந்தனைகளும் சூப்பர்

தங்களின் முதல் படைப்புக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்

இத்தனை நாளா சொல்லவேயில்லை..

கலகலப்ரியா சொன்னது…

அருமைங்க..!

பா.ராஜாராம் சொன்னது…

நல்லாருக்கு தோழர்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//தேடல்
உன்
முகாரிக்கு முடிவுரையும்
பூபாளத்திற்கு வாழ்த்துரையும்
எழுதுமோர் ...
சிறகுச் சித்தாந்தம் //

அருமை அருமை... தேடலைப்பற்றிய அழகான வரிகள்

உங்களின் எழுத்து பயணம் சிறக்க வாழ்த்துகள் நண்பா

RAMYA சொன்னது…

//
தேடல்
உன்
முன்னேற்றத்தை
முகவரியாய் எழுதும்.
முகத்தைப்
பொன்னேட்டில் வரையும் .
//

அருமையான வரிகள்...

தேடலில் ஒரு சுகம் இருக்கு. அதுதான் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவும் அமைந்து விடுகிறதே!

வாழ்த்துக்கள்!

அன்புடன் நான் சொன்னது…

VN.Thangamani கூறியது...
தேடல்தான் எல்லாவலர்சிக்கும் விதையும் வித்தும் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். பதிவுக்கு நன்றி. சி.கருணாகரசு அவர்களே.//

வ‌ருகைக்கும் வாழ்த்துக்கும் ந‌ன்றிங்க‌.

அன்புடன் நான் சொன்னது…

வேல் கண்ணன் கூறியது...
நல்லது. இனி உங்களின் வெற்றி பயணத்தில் நாங்களும் உடன் சேருவோம்.//

ந‌ம்பிக்கை வார்த்தைக்கு ந‌ன்றிங்க‌ தோழ‌ர்.

அன்புடன் நான் சொன்னது…

கதிர் - ஈரோடு கூறியது...
தேடல்தான் தான் வாழ்க்கை...

கவிதை அருமை//


வ‌ருகைக்கும் வாழ்த்திக்கும் ந‌ன்றிங‌க க‌திர‌ண்ணா.

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...
அருமையான கவிதை

இந்தப் பொத்தகத்தைப் படித்தவன் என்னும் முறையிலும்,
உங்களின் கவிதை வரிகளை நேசிக்கும் வாசகன் என்னும் முறையிலும் ,தங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்னும் பல படைப்புகளை எதிர்நோக்கி

அன்புடன்
திகழ்


வ‌ருகைக்கும் வாழ்த்திக்கும் ந‌ன்றிங‌க திக‌ழ்.

அன்புடன் நான் சொன்னது…

ஆரூரன் விசுவநாதன் கூறியது...
சுய முன்னேற்றத்தின் முதல் படி தேடல்............

பிறந்தவுடன் தொடங்கும் தேடல் ஏனோ பாதியில் நின்றுவிடுகிறது பலருக்கு....

வரிகள் வசீகரம்

அன்புடன்
ஆரூரன்//


மிக்க‌ ந‌ன்றிங்க‌ ஆரூர‌ன்.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
தேடல் இல்லையென்றால் வாழ்வு மந்தமாய்.வாழ்வின் சுவாரஸ்யமே தேடல்தான்.//


மிக்க‌ ந‌ன்றிங்க‌ ஹேமா.

அன்புடன் நான் சொன்னது…

இரத்தினபுகழேந்தி கூறியது...
தேடல் அதுதானே நம்மையெல்லாம் இயக்கிக்கொண்டிருக்கிறது நண்பரே. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்//


முத‌ல் வ‌ருகைக்கும்.வாழ்த்துக்கும்... மிக்க‌ ந‌ன்றிங்க‌.

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
சுவாசம் எப்படி தேவையோ அது போன்றே தேடலும் ...

-----------------

தேடலினால்
சிகரங்கள்
உன்னிடம்
கைகுலுக்கும் .
தேசங்கள்
உன்னை மொழிபெயர்க்கும்

------------------

அருமை நண்பரே!//


வாங்க‌ வாங்க.

அன்புடன் நான் சொன்னது…

இன்றைய கவிதை கூறியது...
//தேடல்
வாழ்வின் பிடிப்பு
வசந்தத்தின் அழைப்பு
இது ,
என்றும் உன்னை
இளமையாய் வைத்திருக்கும்
சுவை மருந்து - இதை
தினம் அருந்து.//

அருமையான பதிவு.

தேடல் பற்றி இத்துணை தெளிவாய்
இதுவரை நான் படித்ததில்லை!

-கேயார்//

மிக்க‌ ந‌ன்றிங்க‌ கேயார்.

அன்புடன் நான் சொன்னது…

பிரியமுடன்...வசந்த் கூறியது...
//தேடல்
விடியலைக் கற்பிக்கும்
வியர்வைப் பாடம் .
வெற்றிக் கனி பறிக்க
வித்திடும் ஏணி .//

விளக்கமும் தேடல் குறித்தான மற்ற சிந்தனைகளும் சூப்பர்

தங்களின் முதல் படைப்புக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்

இத்தனை நாளா சொல்லவேயில்லை..//


இது 2004 ல் வெளியிட்ட‌ நூல். ஆனால் வ‌லைத்த‌ள‌ம் 2009 ல் தான் ஆர‌ம்பித்தேன்... அதான் அதைப்ப‌ற்றி எழுத‌வில்லை. ஆனால் அந்த‌ நூலிலிருந்து சில‌ க‌விதைக‌ளை என் வ‌லைத‌ள‌த்தில் ப‌திப்பித்து உள்ளேன்.

என்னுடைய‌ திரும‌ண‌த்திற்கு வ‌ருகைபுரிந்த‌ அனைவ‌ருக்கும் என்னுடைய‌ நூலை தான்பூல பையோடு கொடுத்தோம்...அத‌ன் பின் தான் நான் க‌விஞ‌ன் என்ற‌ விட‌ய‌மே சொந்த‌ங்க‌ளுக்கு தெரியும்.


வ‌ருகைக்கும் வாழ்த்துக்கும் ந‌ன்றிங்க‌ வ‌ச‌ந்த்.

அன்புடன் நான் சொன்னது…

கலகலப்ரியா கூறியது...
அருமைங்க..!//


த‌ங்க‌ளின் முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌... தொட‌ர்ந்து வாங்க‌.

அன்புடன் நான் சொன்னது…

பா.ராஜாராம் கூறியது...
நல்லாருக்கு தோழர்.//

மிக்க‌ ந‌ன்றிங்க‌ பாரா அவ‌ர்க‌ளே!

அன்புடன் நான் சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
//தேடல்
உன்
முகாரிக்கு முடிவுரையும்
பூபாளத்திற்கு வாழ்த்துரையும்
எழுதுமோர் ...
சிறகுச் சித்தாந்தம் //

அருமை அருமை... தேடலைப்பற்றிய அழகான வரிகள்

உங்களின் எழுத்து பயணம் சிறக்க வாழ்த்துகள் நண்பா//

வாழ்த்துக்கும் வ‌ருகைக்கும்
ந‌ன்றி ந‌ண்பா!

அன்புடன் நான் சொன்னது…

RAMYA கூறியது...
//
தேடல்
உன்
முன்னேற்றத்தை
முகவரியாய் எழுதும்.
முகத்தைப்
பொன்னேட்டில் வரையும் .
//

அருமையான வரிகள்...

தேடலில் ஒரு சுகம் இருக்கு. அதுதான் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவும் அமைந்து விடுகிறதே!

வாழ்த்துக்கள்!//

வ‌ருகைக்கும்... வாழ்த்துக்கும் ந‌ன்றிங்க‌ ர‌ம்யா.

ஸ்ரீராம். சொன்னது…

"வானத்தையே விலை பேசும் வசீகர மந்திரம்" வார்த்தை மந்திரம். தேடல் இல்லாத வாழ்வேது?நன்றாய் இருக்கிறது.

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
"வானத்தையே விலை பேசும் வசீகர மந்திரம்" வார்த்தை மந்திரம். தேடல் இல்லாத வாழ்வேது?நன்றாய் இருக்கிறது.//


மிக்க‌ ந‌ன்றிங்க ஸ்ரீராம்.

விஜய் சொன்னது…

தேடலை சுவாசி

ஆஹா தலைப்பே மிக அழகா இருக்கே

கவிதை அழகு

விஜய்

சிவரஞ்சனிகருணாகரசு சொன்னது…

//தேடல்
உன்
முன்னேற்றத்தை
முகவரியாய் எழுதும்.
முகத்தைப்
பொன்னேட்டில் வரையும் .

தேடல்
விடியலைக் கற்பிக்கும்
வியர்வைப் பாடம் .
வெற்றிக் கனி பறிக்க
வித்திடும் ஏணி .//
அருமையான வரிகள்

அன்புடன் நான் சொன்னது…

கவிதை(கள்) கூறியது...
தேடலை சுவாசி

ஆஹா தலைப்பே மிக அழகா இருக்கே

கவிதை அழகு

விஜய்//

மிக்க‌ ந‌ன்றிங்க‌ விஜ‌ய்.

அன்புடன் நான் சொன்னது…

சிவரஞ்சனிகருணாகரசு கூறியது...
//தேடல்
உன்
முன்னேற்றத்தை
முகவரியாய் எழுதும்.
முகத்தைப்
பொன்னேட்டில் வரையும் .

தேடல்
விடியலைக் கற்பிக்கும்
வியர்வைப் பாடம் .
வெற்றிக் கனி பறிக்க
வித்திடும் ஏணி .//
அருமையான வரிகள்//

த‌ங்க‌ளின் க‌ருத்துக்கு மிக்க‌ ...மிக்க‌...மிக்க‌..........

thiyaa சொன்னது…

தேடல் உள்ள வாழ்க்கையில்தான் சுகமிருக்கும்.

அன்புடன் நான் சொன்னது…

தியாவின் பேனா கூறியது...
தேடல் உள்ள வாழ்க்கையில்தான் சுகமிருக்கும்.//

வ‌ருகைக்கு ந‌ன‌றிங்க‌.

பா.ராஜாராம் சொன்னது…

நல்லா இருக்கு கருணா!பகிர்வுக்கு நன்றி!

Admin சொன்னது…

நல்ல வரிகள். வாழ்த்துக்கள் இன்னும் பல படைப்புக்கள் உங்களிடமிருந்து வரட்டும்

புலவன் புலிகேசி சொன்னது…

முதல் பதிப்பே நல்ல தேடல். இன்னும் பல படைப்புகளுக்கு வாழ்த்துக்கள்....

Kala சொன்னது…

சுவாசம் இருக்கும் வரைதான்
தேடல்.....
தேடல் இருக்கும் வரை
சுவாசம் இருக்குமா?
அருமையான கவிதை அரசு.

அன்புடன் நான் சொன்னது…

பா.ராஜாராம் கூறியது...
நல்லா இருக்கு கருணா!பகிர்வுக்கு நன்றி!

மிக்க நன்றிங்க பாரா.

அன்புடன் நான் சொன்னது…

சந்ரு கூறியது...
நல்ல வரிகள். வாழ்த்துக்கள் இன்னும் பல படைப்புக்கள் உங்களிடமிருந்து வரட்டும்//

வாழ்த்துக்கு மிக்க‌ ந‌ன்றி ச‌ந்ரு.

அன்புடன் நான் சொன்னது…

புலவன் புலிகேசி கூறியது...
முதல் பதிப்பே நல்ல தேடல். இன்னும் பல படைப்புகளுக்கு வாழ்த்துக்கள்....

புலிகேசிக்கு நன்றிகள் பல.

அன்புடன் நான் சொன்னது…

Kala கூறியது...
சுவாசம் இருக்கும் வரைதான்
தேடல்.....
தேடல் இருக்கும் வரை
சுவாசம் இருக்குமா?
அருமையான கவிதை அரசு.//

வாழும் வ‌ரை தேட‌லோடு இருந்தால் போதும் ...
வ‌ருகைக்கு ந‌ன்றி க‌லா.

creativemani சொன்னது…

லட்சியம் தெறிக்கும் வார்த்தைகள்...

அன்புடன் நான் சொன்னது…

அன்புடன்-மணிகண்டன் கூறியது...
லட்சியம் தெறிக்கும் வார்த்தைகள்...//

ந‌ன்றி ம‌னிக‌ண்ட‌ன்.

அரங்கப்பெருமாள் சொன்னது…

என்னைத் தேடி வந்தமைக்கு நன்றி... எனது பக்கத்திற்கு ஒருமுறை வந்து போனால் காணாமல் போன காரணம் புரியும்... நன்றி தோழனே....

அன்புடன் நான் சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
என்னைத் தேடி வந்தமைக்கு நன்றி... எனது பக்கத்திற்கு ஒருமுறை வந்து போனால் காணாமல் போன காரணம் புரியும்... நன்றி தோழனே....//

த‌ங்க‌ளின் துய‌ர்க‌ண்டு வ‌ருந்துகிறேன்....

ராமலக்ஷ்மி சொன்னது…

கவிதை வெகு அருமை.

//இது
சுயமேம்பாட்டின்
சுருக்கெழுத்து.//

உண்மையை சுருக்கமாய் சொல்லி விட்டீர்கள்.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
கவிதை வெகு அருமை.

//இது
சுயமேம்பாட்டின்
சுருக்கெழுத்து.//

உண்மையை சுருக்கமாய் சொல்லி விட்டீர்கள்.//

மிக்க‌ ந‌ன்றிங்க‌.

இரசிகை சொன்னது…

gud...!

அன்புடன் நான் சொன்னது…

இரசிகை கூறியது...
gud...!

நன்றிங்க ரசிகை.

Related Posts with Thumbnails